அரசு பள்ளியில் நடைபெற்ற பன்முகத்திறன் விழா..!

 

மதுரை ஒத்தக்கடை நரசிங்கம் கோயில் செல்லும் வழியில் அமைந்துள்ளது ஒத்தக்கடை துவக்கப்பள்ளி . இங்கு பன்முகத்திறன் விழா போட்டி திருவிழா போன்று நடைபெற்றது . இதில் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் ஜெயபால்  தலைமையில் தாங்கினார் . பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் முருகேஸ்வரி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் தென்னவன் வரவேற்புரை நிகழ்த்தி  ஆண்டறிக்கையினை படைத்தார். விழாவில் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியாக கரகாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கும்மி, பரதம், கிராமிய நடனம், நாடகம் பாரதியார் பாட்டு என பன்முக கலை நிகழ்வுகள் நடைபெற்றன.  ஓவியம், பேச்சு, கட்டுரை, பாடல் பாடுதல், களிமண் பொம்மை, அழகிய கையெழுத்து, வினாடி வினா, மாறுவேடம், முதல் மதிப்பெண், நினைவாற்றல் திறன் ஆகியவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

விழாவில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், கிராமக்கல்விக்குழு உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் மோசஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஆசிரியை மாலா நன்றி கூறினார். தனியார் பள்ளியை விஞ்சும் அளவிற்கு அரசு பள்ளியில் விழா நடக்கிறதே என்று அப்பகுதி மக்கள் பள்ளிக்கு வந்து நிகழ்ச்சிகளை ரசித்து மாணவர்களை பாராட்டி சென்றனர் .

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!