'காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும்' உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய டிடிவி | ttv dinakaran starts hunger strike in thanjavur

வெளியிடப்பட்ட நேரம்: 10:27 (25/03/2018)

கடைசி தொடர்பு:10:56 (25/03/2018)

'காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும்' உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய டிடிவி

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தாத தமிழக அரசைக் கண்டித்தும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் டிடிவி தினகரன்  தலைமையில் தஞ்சாவூர் திலகர் திடலில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. 

டிடிவி தினகரன்

இது வரை மாநாடுகள் மட்டுமே நடத்தபட்டு வந்த திலகர் திடலில் முதன்முதலாக உண்ணாவிரத போராட்டத்திற்காக பிரமாண்ட  பந்தல் அமைக்கப்பட்டது. இதில் விஐப்பிக்கள் வருவதற்காக ஒரு வழியும்,தொண்டர்கள் வருவதற்காக ஒரு வழியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவாயிலில்  மேட்டூர் அணையும், கல்லணை அணையின் பெரிய படங்களை வைத்து அமைத்திருந்தனர். இதில் பல விவசாய சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டு பேசி வருகின்றனர். 

உண்ணாவிரதப் போராட்டம்

தினகரன் ஆதரவாளர்களான தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள 18 எம்எல்ஏக்களில்  ஒரு சிலர் மட்டும் இன்னும் வரவில்லை.தினகரன் ஜெயலலிதா,எம்ஜிஆர் படங்களுக்கு மலர் தூவி உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். மத்திய அரசு மேற்பார்வை குழு அமைத்திருப்பது ஏமாற்று வேலை. இது தவறான முன்னுதாரணம் மத்திய அரசின் கண்துடைப்புதான் இது. இதே நிலை நீடித்தால் தமிழகம் சோமாலியா போல் மாறிவிடும். அந்த நிலை மாறுவதற்குள் எல்லாக் கட்சிகளும் ஒன்று கூடி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்குப் போராட வேண்டும் என டிடிவி தினகரன் பேசினார். விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் மத்திய அரசையும்,பிரதமர் மோடியை விமர்சித்துப் பேசுகின்றனர். இதில் தினகரனை வருங்கால முதல்வர் என்று  அனைவரும் புகழ்ந்து பேசி வருகின்றனர்.ஹெலி ஹேம் புழுதி பறக்க நிகழ்வுகளைப் படம்பிடித்து வருகிறது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க