இனி சேலத்திலிருந்து சென்னைக்கு 1 மணி நேரம் - இன்று முதல் விமான சேவை துவக்கம்

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சேலம் மற்றும் சென்னை இடையிலான விமானப் போக்குவரத்து சேவை சேலத்தில் இன்று துவங்கியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டத்தில் உள்ள கமலாபுரத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு. அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட காரணத்தால், மக்களிடையே விமான பயணத்திற்காக ஆர்வம் குறைந்தது. அதனால், கடந்த 2010-ம் ஆண்டு இந்த விமான நிலையம் மூடப்பட்டது. 

அதன்பின் 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சேலம் மற்றும் சென்னை இடையிலான விமானப் போக்குவரத்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது. சென்னையில் இருந்து காலை 9.50 மணிக்குப் புறப்படும் விமானம் சேலத்திற்கு 10.40 மணிக்கு சென்றடையும். மேலும், ரூட்ஜெட் விமான நிறுவனம் சார்பில் 72 பேர் பயணிக்கும் விமானத்தில், ஒரு நபருக்கான கட்டணம் ரூ.1,499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த விமான சேவையை தொடங்கி வைப்பதற்காக சேலம் சென்றுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இது குறித்து பேசிய அவர், விமான சேவையால் சேலத்தைச் சுற்றியுள்ள நாமக்கல் ராசிபுரம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் தொழில் வளர்ச்சியடையும்.மேலும், 62000 தொழிற் முதலீட்டைத் தமிழகம் ஈர்த்துள்ளதால் விமான சேவை முக்கியத்துவம் பெறுகின்றது என்றார். 

மேலும், மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் மட்டுமே மக்களுக்கான நலத்திட்டங்களைப் பெற முடியும் மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து பணியாற்றுவது எதிர்க்கட்சிகளுக்குப் பிடிக்கவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!