வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (25/03/2018)

கடைசி தொடர்பு:12:35 (25/03/2018)

" உங்களை பார்க்க நான் 26 வருடமாக காத்திருக்கிறேன்".. ஆச்சர்யப்படுத்திய அஜித்

கோலிவுட் சினிமாவில் நடக்கும் ஸ்ட்ரைகால் அஜித் நடிக்கும் விசுவாசம் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் அஜித் ஒரு புதிய முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.

கோலிவுட்டில் நடக்கும் ஸ்ட்ரைகின் காரணமாக பல படங்களின் ரிலீஸும், படப்பிடிப்பு பணிகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. ஒருபுறம் திரையரங்குகள் சிலவற்றில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. நடிகர்கள் தங்களுக்கு பிடித்த இடங்களுக்கும், சொந்த அலுவல்களையும் பார்த்து வருகிறார்கள். ஸ்டிரைக்கால் விஸ்வாசம் படப்பிடிப்பு தள்ளிப்போக இந்த இடைவெளியை தனக்கேற்ற வகையில் மாற்றியிருக்கிறார் நடிகர் அஜித் குமார். அவரது நீண்ட நாள் ஆர்வமான ஏரோ மாடலிமங்கில் கவனத்தை திருப்பியுள்ளார். இது தொடர்பான பிரத்யேக தொழில்நுட்பத்தைப் பற்றி தெரிந்துகொள்ள சென்னை குரோம்பேட்டையிலுள்ள எம்.ஐ.டி கல்லூரியின் ஏரோ மாடலிங் துறைக்கு விசிட் அடித்துள்ளார்.

அஜித் குமார்


இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள ஏரோ மாடலிங் டிபார்ட்மெண்டை சேர்ந்த மாணவர்கள், அஜித் குமார் ஏரோ மாட்லிங்கின் நவின குவாட்காப்டர் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பைப் பற்றி மாணவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டதாக தெரிவித்துள்ளனர். பெரிய காத்திருப்புக்கு பிறகு அவரை பார்த்த மாணவர்கள் 12 மணி நேரம் காத்திருக்கிறோம் என்று மாணவர்கள் கூற. அஜித் " உங்களை பார்க்க நான் 26 வருடமாய் காத்திருக்கிறேன் பா "எனக் கூறி மகிழ்வித்திருக்கிறார். தனக்கு ஆலோசனை நடத்திய மாணவர்களுடன் போட்டோ ஒன்றையும் எடுத்துள்ளார்.