`கமல், ரஜினியால் நாடாள முடியாது!’ - தனியரசு எம்.எல்.ஏ. கருத்து

"வயதான காலத்தில் அரசியலுக்கு வந்துள்ள கமல்,ரஜினியால் நாடாள முடியாது. அதற்கு முயன்றால் ஏமாற்றமே மிஞ்சும்" என்று கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு கருத்துத் தெரிவித்துள்ளார். 

தனியரசு

ஒரு நிகழ்ச்சிக்காக கரூர் வந்த அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்பாேது,பேசிய அவர், "கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.கவுடன் இணைந்து செயல்படுவோம். உச்ச நீதிமன்றம் தீர்பளித்தும், மத்திய அரசு காவிரி பிரச்னையை தீர்க்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முற்படாதது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. மத்திய அரசு இதே நிலைப்பாடு கொள்ளுமானால்,இதற்காக புதிய அரசியல் சட்டதிருத்தம் கொண்டு வந்து மத்திய அரசை விலக்க வேண்டும்.
தமிழர்களின் உரிமைகளுக்கு எதிராக செயல்படும் பி.ஜே.பி எக்காலத்திலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் மத்திய,மாநில அரசுகள் ஆலையை மூடி,அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் நல்ல தீர்வை ஏற்படுத்த வேண்டும். பா.ஜ.க கட்சி எப்படியாவது தமிழ்நாட்டில் காலூன்றிட வேண்டும் என்று தலையால் தண்ணீர் குடித்து பார்க்கிறது. அதற்காக கலவரத்தை தூண்ட ரதயாத்திரை நடத்துகிறது. ரதயாத்திரையை மதயாத்திரையாக நடத்தினாலும் பிரச்னையில்லை. மதச்சார்பற்ற நாட்டில் ராமராஜ்ஜியம் அமைப்போம் என்று அவர்கள் சாெல்லுவதால் எதிர்ப்பு தெரிவிக்கிறேன்" என்று முடித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!