CT 100 பைக்கின் விலை 5,000 ரூபாய் குறைந்தது - பஜாஜ் ஆட்டோ அதிரடி!

'இந்தியாவின் விலை குறைவான பைக்' என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான CT 100 சீரிஸ் பைக்கின் விலையை, இன்னும் குறைத்திருக்கிறது பஜாஜ் ஆட்டோ நிறுவனம். ஹீரோ -  ஹோண்டா - டி.வி.எஸ் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், பைக்குகளை மட்டுமே இந்நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. எனவே, அதிகரித்து வரும் போட்டியைக் கருத்தில் கொண்டும்

 

பஜாஜ்

 

தனது விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்திலும் தனது ஆரம்பகட்ட மாடலான CT 100 சீரிஸ் பைக்குகளின் விலையை மாற்றியமைத்திருக்கிறது பஜாஜ். இந்தப் புதிய விலைப் பட்டியலின்படி, கிக் ஸ்டார்ட் மற்றும் அலாய் வீல் கொண்ட CT 100 KS Alloy மாடலின் விலை, 37,235 ரூபாயிலிருந்து 32,442 ரூபாயாகக் குறைந்திருக்கிறது. 

 

ct 100 b


இது ஸ்போக் வீல் மற்றும் வட்ட ஹெட்லைட் கொண்ட CT 100 B பைக்கைவிடத் தோராயமாக 600 ரூபாய் மட்டுமே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது (CT 100 B - 31,866). மேலும் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் மற்றும் DTS-i இன்ஜின் கொண்ட CT 100 ES Alloy பைக்கின் விலை, 40,499 ரூபாயிலிருந்து 40,083 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேநேரத்தில் 'இந்தியாவின் விலை குறைவான டூ-வீலர்' என்ற புகழைக் கொண்ட டி.வி.எஸ் நிறுவனத்தின் XL 100 சீரிஸ் மொபட்டுகளின் விலை,

 

ct 100 es

 

முறையே 29,254 ரூபாய் (XL 100 Comfort) - 32,254 ரூபாய் (XL 100 Std) - 33,004 ரூபாய் (XL 100 Heavy Duty) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, குறைந்த விலையில் முதன்முறையாகப் பைக் வாங்க நினைப்பவர்களின் மத்தியில், CT 100 சீரிஸ் அதிக லைக்குகளைப் பெறும் என நம்பலாம். (*விலைகள் அனைத்தும் சென்னை எக்ஸ் ஷோரூம் விலைகள் ).

 

tvs xl 100

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!