பிரசவத்துக்குப் புறப்பட்ட கர்ப்பிணிக்கு வீட்டில் நடந்த சோகம்!

தஞ்சை மாவட்டம், இனாம்கிளியூரைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் தனலட்சுமி பிரசவ நாளன்று பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

pregnant women

 

வலங்கைமான் அருகே உள்ள இனாம்கிளியூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரின் மனைவி தனலட்சுமி. கர்ப்பிணிப் பெண்ணான இவர், பிரசவத்துக்காக மருத்துவமனைக்குக் கிளம்பிக்கொண்டிருந்த தருணத்தில் வீட்டின் பின்புறம் உள்ள புதர் ஒன்றில் இருந்து வந்த நல்லபாம்பு கடித்ததால் தனலட்சுமி வலி தாங்காமல் அலறியிருக்கிறார். இவரது அலறல் சத்தம் கேட்டு கணவர் கிருஷ்ணன் மற்றும் உறவினர்கள் ஓடி வந்திருக்கிறார்கள்.

மயங்கிய நிலையில் கிடந்த தனலட்சுமியை உடனடியாகக் கும்பகோணத்தில் உள்ள அரசுப் பொதுமருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள். தனலட்சுமி ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். வலங்கைமான் காவல்நிலைய போலீஸார், இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரசவ நாளன்று பாம்பு கடித்து தனலட்சுமி இறந்த சம்பவம் இப்பகுதி மக்களை பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!