விழுப்புரம் ஆராயி வழக்கில் முக்கிய நபர் கைது!

தமிழகத்தையே உலுக்கிய விழுப்புரம், வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆராயி தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியை  மாவட்டக் காவல்துறை கைது செய்திருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆராயி. கடந்த மாதம் 21-ம் தேதி இரவு தனது 10 வயது மகன் சமயன் மற்றும் 14 வயது மகள் தனத்துடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த சில மர்ம நபர்கள் மூன்று பேரையும் கொடூரமாகத் தாக்கியதோடு 10 வயது சிறுவன் சமயனையும் மிதித்துக் கொன்றது. அதேபோல சிறுமி தனத்தையும் பாலியல் வன்கொடுமை செய்தது. ஆராயி மற்றும் அவரின் மகள் தனம் இருவருக்கும் இந்தத் தாக்குதலால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சுயநினைவின்றி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஆராயி

இந்த வழக்கில் கடலூர் மாவட்டம், புவனகிரியைச் சேர்ந்த ஒருவனை அதிரடியாகக் கைது செய்து விசாரணையைத் தொடங்கியது விழுப்புரம் மாவட்டப் போலீஸ். அவனிடம் நடத்தப்பபட்ட விசாரணையில், நகைக்காகத்தான் பெண்களைத் தாக்கியதாகவும் அதை வெளியில் சொல்லாமல் இருப்பதற்காகவுமே அவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிவித்ததாகவும் சொல்கிறார்கள் காவல்துறையினர். மேலும், ஆராயியையும் நகைக்காக அடித்தபோதுதான் சிறுவன் சமயனும் குறுக்கே வந்திருக்கிறான். அதனால்தான் அவனையும் அடித்துக் கொன்றிருக்கிறான் என்றும் சொல்கிறது காவல்துறை தரப்பு. இந்த வழக்கு தொடர்பாக இன்னும் சற்று நேரத்தில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!