ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு! அவதிப்படும் கிராமப்புற மக்கள்

நியாய விலைக் கடைகளின் மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டால் கிராமப்புற மக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகிறார்கள்.

மண்ணெண்ணெய்

தமிழ்நாட்டில், குறிப்பாகக் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களிலிருந்து மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுத்து, பல்வேறு நிலைகளில் இதைப் பிரித்தெடுத்து பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்டவை உற்பத்தி செய்து வருகிறது. இதனால் நிலத்தடிநீர் உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டு இங்குள்ள மக்கள் பல்வேறு துயரங்களைச் சந்தித்து வருகிறார்கள்.

தமிழகத்தில் எண்ணெய் எடுக்கும் மத்திய அரசு, மாநிலத்துக்குத் தேவையான அளவு மண்ணெண்ணெய் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் மண்ணெண்ணெய்யைத்தான் இன்றளவும் கிராமப்புற மக்கள் மிகவும் முதன்மையான எரிபொருளாகப் பயன்படுத்தி வருகிறார்கள். 7 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு 54,000 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கி வந்தது மத்திய அரசு. இந்த அளவை கிடுகிடுவென வேகமாகக் குறைத்து தற்பொழுது 17,800 கிலோ லிட்டர்தான் வழங்குகிறது. இனிவரும் ஆண்டுகளில் இந்த அளவை மத்திய அரசு மேலும் குறைக்கும் எனச் சொல்லப்படுகிறது. இதனால், நியாய விலைக் கிடைகளில் போதியளவு மண்ணெண்ணெய் கிடைப்பதில்லை. இந்தத் தட்டுப்பாட்டால் கிராமப்புற ஏழை மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!