`எந்தத் தலைவன் நிழலிலும் இனி ஒதுங்க மாட்டேன்' - நாஞ்சில் சம்பத் சபதம்

எந்தக் கொடியையும் ஏந்த மாட்டேன்; எந்தத் தலைவர் நிழலிலும் ஒதுங்க மாட்டேன் என நாஞ்சில் சம்பத் அதிரடியாக அறிவித்ததுமட்டுமில்லாமல் தமிழக அரசைக் கடுமையாக விமர்சனம் செய்தார்.

அரியலூர் மாவட்டம், திருமழப்பாடியில் வைத்தியநாதன் சுவாமி கோயில் திருவிழாவில் இலக்கிய சொற்பொழிவுக்கு வந்த நாஞ்சில் சம்பத் அரியலூர் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறுகையில், ''தமிழக அரசின் செயல்பாடுகளால் மக்கள் கொதிப்பில் உள்ளனர். எடப்பாடி அரசைக் கவிழ்க்க கடப்பாரை தேவையில்லை நீதிமன்றத் தீர்ப்பே போதுமானது. அத்தீர்ப்பு நியாயத்தின் அடிப்படையில் வந்தால் இந்த ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் எல்லோரும் வீட்டுக்குச் செல்வார்கள் அது உறுதி'' என்றார்.

மாமல்லபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் மல்லை சத்யாவிடம் அதிக நேரம் பேசியுள்ளீர்களே... எதுவும் ம.தி.மு.க-வில் சேரும் எண்ணம் உள்ளதா என்று கேட்டதற்கு, ”இது நீங்களே கிளப்பிவிடுகிற வதந்தி. மல்லை சத்யா எனக்கு நீண்டகால நண்பர். அவர் என்னைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் நலம் விசாரித்தார். அதுமட்டுமல்லாமல் தமிழகச் சூழல் பற்றியும் நீண்ட நேரம் பேசினோம். அவ்வளவு தான். இதில் எந்தவித முகாந்திரமும் கிடையாது. இனி எப்போதும் எந்தக் கொடியையும் ஏந்த மாட்டேன். எந்தத் தலைவர் நிழலிலும் ஒதுங்க மாட்டேன் எனக் கறாகக் கூறினார்.

நாஞ்சில் சம்பத்

தமிழகத்தில் யார் போராடினாலும் மத்தியில் உள்ளவர்கள் காதில் விழாது. மேலாண்மை வாரியம் என்பதில் உள்ள ஆண்மையை எடுத்துவிட்டு பார்வையைப் போட்டுள்ளார்கள். கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை. இதற்குத் தமிழக அரசு மிக அழுத்தமான நடவடிக்கையை எடுக்கத் தவறினால் வருங்கால தலைமுறைகளின் சாபத்துக்கும் கோபத்துக்கும் ஆளாகும் என்பதில் மாற்றமில்லை. இப்பிரச்னையில் அனைத்துக்கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்'' எனக் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!