`அ.தி.மு.க வெற்றிக்கு விஜய் ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும்!' - அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்

'நடிகர் விஜய் ரசிகர்கள், அ.தி.மு.கவுக்கு தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்' என தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அமைச்சர் தங்கமணி

விஜயின் 44-வது பிறந்தநாளை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில், மின்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, எம்.பி. சுந்தரம், எம்.எல்.ஏ., பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில், தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்ட அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் வழங்கினர். பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் பேசிய மின்துறை அமைச்சர், ``முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்காக பாடுபட்டவர்கள் விஜய் ரசிகர்கள். அதேபோல, வருங்காலங்களிலும் அ.தி.மு.க-வுக்கு ஆதரவளித்து, பெருவாரியான வெற்றிபெற விஜய் ரசிகர்கள் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தார். விஜய் மக்கள் இயக்க விழாவில், நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!