உள்ளாட்சி வார்டுகள் மறு வரையறை! தமிழகத் தேர்தல் ஆணையத்துக்கு 7 நாள் கெடு

உள்ளாட்சி வார்டுகள் வரையறை- உயர் நீதிமன்றம் கெடு

மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "தமிழக உள்ளாட்சித் தேர்தல்  நடத்தாமல் இருப்பதன் காரணத்தால், உள்ளாட்சித்துறையோடு தொடர்புடைய சாலை அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை கட்டுமானப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், உள்ளாட்சிப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அலுவலர்களின் பதவிக்காலம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டது. இதனால், தற்போது உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் விருப்பம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு இல்லை என்பது தெரியவருகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை கோரி, அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. ஆகவே, எனது மனுவை பரிசீலித்து, தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜராக வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு ஆய்வுநடத்தி, போர்க்கால அடிப்படையில் தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதன் பின்பும் வார்டுகள் மறுவரையறைசெய்வதுகுறித்து பொதுமக்களிடமிருந்து 19,000 புகார்கள் பெறப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், தமிழகத் தேர்தல் ஆணையம் 7 நாள்களுக்குள் பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!