’பாசிட்டிவான கேள்வி கேளுங்க பாஸ்’ -பதில் சொல்லாமல் நழுவிய அமைச்சர் விஜயபாஸ்கர்

சிவகங்கை அரசு மருத்துக் கல்லூரியின்  முதல் பட்டமளிப்பு விழா, மருத்துவக் கல்லூரி ஆடிட்டோரியத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

விஜயபாஸ்கர்

சிவகங்கை மருத்துவக் கல்லூரி, 2012-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்தபோது போதுமான உபகரணங்கள் இல்லை. நர்ஸிங் கல்லூரி இல்லாத குறை இன்று வரை இருக்கிறது. இங்கு, மருத்துவம் படித்த  மாணவர்களில் பெரும்பாலானவர்கள் கிராமப்புறத்தில் இருந்து வந்தவர்கள். கல்லூரி ஆரம்பித்தபோது 100 மாணவர்கள் சேர்க்கப்பட்டார்கள். டாக்டர் பட்டம் பெற்றவர்கள் 96 பேர். இதற்கான விழா, கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. டாக்டர் பட்டம் பெற்ற டாக்டர்கள், நான்கு குடும்ப உறுப்பினர்களை அழைத்து வர அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.  இவ்விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர், பாஸ்கரன், எம்.பி., செந்தில்நாதன், மாவட்ட ஆட்சியர் லதா போன்றவர்கள் கலந்துகொண்டார்கள். 96 டாக்டர்களுக்கு பட்டங்களை வழங்கி கெளரவப்படுத்தினார்கள் அமைச்சர்கள். அப்போது பேசிய அமைச்சர் பாஸ்கரன், 'சிவகங்கை ரொம்பவே பின் தங்கிய பகுதி இங்கே, நோயாளிகளாக வருபவர்கள் அப்பாவிகள். அவர்களிடம் அன்பாக நாலு வார்த்தைகள் பேசுங்கள், கோபமாகப் பேசாதீர்கள். நோயாளிகளுக்கு நீங்கள்தான் கடவுள்” என்றார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது , ''தமிழகத்தில் 1000 மாணவர்கள் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துவருகிறோம் என்றவரிடம், காவேரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட், எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து கேள்வி எழுப்பியபோது 'பாஸ், பாசிட்டிவான கேள்வி கேளுங்க” என்று சொல்லிவிட்டுப் பறந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!