`உண்ணாவிரதம் சக்சஸ்; அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகணும்' - தினகரனுக்கு அறிவுறுத்திய சசிகலா | Sasikala's advice to dinakaran

வெளியிடப்பட்ட நேரம்: 14:43 (27/03/2018)

கடைசி தொடர்பு:14:57 (27/03/2018)

`உண்ணாவிரதம் சக்சஸ்; அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகணும்' - தினகரனுக்கு அறிவுறுத்திய சசிகலா

"நாம் நடத்திய உண்ணாவிரதம் சக்சஸ் ஆகிவிட்டது. அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகணும்" என்று டி.டி.வி.தினகரனுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் சசிகலா.

சசிகலா

கணவர் நடராசனின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள பரோலில் வெளிவந்துள்ள சசிகலா, தஞ்சாவூரில் தங்கியிருக்கிறார். கடந்த 20ம் தேதி வந்த சசிகலாவை நிர்வாகிகள் பலர் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று சசிகலா யாரையும் சந்திக்கவில்லை. அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் யாரையும் சந்திக்கவில்லை என தெரிகிறது. நேற்று டாக்டர் ஒருவர் வந்து சசிகலாவுக்கு  பரிசோதனை செய்தார். இதனையடுத்து இன்று காலை 10.20 மணிக்கு தினகரன் தன் மனைவி மற்றும் மகளோடு சசிகலா தங்கியிருக்கும் இல்லத்துக்கு வந்தார். அதன் பிறகு விவேக் அவரது மனைவியோடு வந்தார். இவர்களுக்காக சசிகலா காலையிலேயே காத்திருந்தார். 

அடுத்த என்ன செய்யலாம் என்பது குறித்து இவர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தினர், அப்போது, உண்ணாவிரதப் போராட்டம் சக்சஸசா பண்ணுட்டீங்க. அடுத்த பாய்ச்சலுக்கு தயாராக இருக்கணும்" என்று அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை செய்துவிட்டு பின்னர் மாடிக்கு சென்றுவிட்டாராம் சசிகலா.இதனையடுத்து, ரெங்கசாமி, பழனியப்பன் மற்றும் நிர்வாகிகள் கலைராஜன், பரிதி இழம்வழுதி என ஏராளமான நிர்வாகிகளோடு வீட்டிற்குள்ளேயே தினகரன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இதனை கவனிக்க சென்ற செய்தியாளர் ஒருவரை இங்கே ஒண்ணும் நடக்கவில்லை என சொல்லி அவரை அதட்டாத குறையாக வெளியே அனுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. விவரம் அறிந்தவர்களிடம் பேசினோம். "வரும் 30ம் தேதி படத்திறப்பு விழா நடக்கிறது. அதற்காகத்தான் பேசி வருகிறார்கள்" என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க