வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (27/03/2018)

கடைசி தொடர்பு:19:17 (27/03/2018)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கலெக்டர் ஆபீஸை முற்றுகையிட்ட விவசாயிகள்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தைப் புறக்கணித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்

 மத்திய அரசு 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்கான காலக்கெடு முடிய மூன்று நாள்களே உள்ளன. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் விசாயிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவிருந்த குறைதீர் கூட்டத்துக்கு வருகை தந்த விவசாயிகள் மத்திய அரசைக் கண்டித்து உடனடியாகக் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.