கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடு: 6 எம்.எல்.ஏ-க்கள் உள்ளிருப்புப் போராட்டம்

எம்எல்ஏக்கள் புறக்கணிப்பு போராட்டம்ஏக்

கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடு நடப்பதாகக் கூறி தி.மு.க, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ஆறு பேர் நாகர்காேவில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலுக்காக முதற்கட்டமாக 41 சங்கங்களுக்கு கடந்த திங்கள்கிழமை வேட்புமனுத்தாக்கல் நடந்தது. வேட்புமனு பரிசீலனை செய்து நேற்று அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் வேட்புமனு பரிசீலனை செய்து இறுதி வேட்பாளர் பட்டியல் மாலை 5 மணிக்கு அனைத்து சங்க அலுவலகங்களிலும் ஒட்டியிருக்க வேண்டும். ஆனால், ஒட்டவில்லை.

இதனால் முறைகேடு நடப்பதாகக் கூறி, இன்று காலை குமரி மாவட்டத்தின் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சுரேஷ்ராஜன், மனோ தங்கராஜ், ஆஸ்டின், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் விஜயதரணி, பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டடத்தில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு இணை பதிவாளர் நடுக்காட்டு ராஜாவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் எம்.எல்.ஏ-க்கள் சிலரிடம் கோபப்பட்ட ஓர் ஊழியரை அங்கு நின்றிருந்த தொண்டர்கள் இழுத்து வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இப்போதும் உள்ளிருப்புப் போராட்டம் நடக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!