கேள்வித்தாள் வெளியான விவகாரம் - இரு பாடங்களுக்கு மறுதேர்வு அறிவித்தது சி.பி.எஸ்.இ!  | CBSE announced re-examination for Maths paper for class X and Economics paper of class XII

வெளியிடப்பட்ட நேரம்: 16:42 (28/03/2018)

கடைசி தொடர்பு:16:52 (28/03/2018)

கேள்வித்தாள் வெளியான விவகாரம் - இரு பாடங்களுக்கு மறுதேர்வு அறிவித்தது சி.பி.எஸ்.இ! 

கேள்வித்தாள் வெளியான 12-ம் வகுப்பு பொருளியல் மற்றும் 10-ம் வகுப்பு கணக்கு தேர்வுகளுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. 

சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு இந்த மாதம் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த இரு நாள்களுக்கு முன்பு நடந்த 12-ம் வகுப்பு பொருளியலுக்கான தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு நடைபெற்றபோது, அதன் கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானதாகப் புகார் எழுந்தது. வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றில் கேள்வித்தாள் வெளியானதாகக் குற்றச்சாட்டு எழுந்தநிலையில், இந்தக் குற்றச்சாட்டை சி.பி.எஸ்.இ மறுத்தது. எனினும், இந்த விவகாரம் மனிதவளத்துறை அமைச்சகக் கண்காணிப்பில் விசாரிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியானது. 

இந்நிலையில், கேள்வித்தாள் வெளியானதாகக் கூறப்படும் 12-ம் வகுப்பு பொருளியலுக்கான தேர்வை சி.பி.எஸ்.இ ரத்து செய்துள்ளது. இதேபோல், இன்று 10-ம் வகுப்பு கணக்கு தேர்வுக்கான வினாத்தாளும் வெளியானதால், அந்தத் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட பாடங்களுக்கு மறுதேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க