வெளியிடப்பட்ட நேரம்: 19:43 (28/03/2018)

கடைசி தொடர்பு:19:53 (28/03/2018)

`வரி ஏய்ப்பு நடக்கவில்லை' - வசந்தகுமார் எம்.எல்.ஏ. விளக்கம்

வசந்தகுமார்

 வசந்த் & கோ-வில்  வரி ஏய்ப்பு நடக்கவில்லை என்று வசந்தகுமார் எம்.எல்.ஏ. தெரிவித்தார். 

இதுகுறித்து வசந்தகுமார் எம்.எல்.ஏ கூறுகையில், ``மத்திய ஜி.எஸ்.டி. புலனாய்வுத்துறை அலுவலர்கள் 27-ம் தேதி காலை தொடங்கி இரவு வரை வசந்த் & கோ தலைமை அலுவலகத்திலும் வசந்த் & கோ- சைதாப்பேட்டை கிளையிலும் சோதனை மேற்கொண்டனர். இம்மாதிரியான சோதனைகளை வருமானவரி, விற்பனை மற்றும் சேவை வரி, வைப்பு நிதி போன்ற துறைகள் அவ்வப்போது பலதரப்பட்ட நிறுவனங்களில் நடத்துவது வழக்கம். அந்த வகையில்தான் நேற்று வசந்த் & கோ-வில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனை என்றாலே வரிபாக்கி என்றோ வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது என்றோ ஆகிவிடாது. 

 நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது வசந்த் & கோ-வின் சரக்கு மற்றும் விற்பனை சம்பந்தப்பட்ட ஆவணங்களை முழுமையாகச் சோதிக்கப்பட்டன. சோதனை முடிவில் அவையனைத்தும் சரி என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. சில நடைமுறை குறைபாடுகள் ஜி.எஸ்.டி. புலனாய்வுத்துறை அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டன. அக்குறைபாடுகள் விவரம் இருதரப்பட்டது எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். 

 1.7.2017 முதல் ஜி.எஸ்.டி அமலாக்கப்பட்டது. ஜி.எஸ்.டி. அமலாக்கப்பட்டதற்கு முன்பாக வாட் செலுத்தி கொள்முதல் செய்யப்பட்டு விற்கப்படாமல் கைவசம் இருந்த சரக்குகள் ஜி.எஸ்.டி. அமலாக்கத்துக்குப்பின் ஜி.எஸ்.டி.யில் விற்பனை செய்யப்பட்டன. இச்சரக்குகள் ஏற்கெனவே உற்பத்தி வரிக்கு உட்படுத்தப்பட்ட சரக்குகள் ஆகும்" என்றனர்.