தமிழக அரசின் அங்கீகாரம் பெறாத 18 சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு நோட்டீஸ்...!

வேலூர் மாவட்டத்தில், மாநில அரசின் அனுமதி பெறாமல் இயங்கிவரும் 18 சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

கடந்த, 2014-க்கு முன் தொடங்கப்பட்ட, சி.பி.எஸ்.இ., பள்ளிகள், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திடமிருந்து அனுமதி பெற்று இயங்குகின்றன. அதேபோல், மாநில அரசின் அங்கீகாரத்தை சி.பி.எஸ்.இ பெற வேண்டும் எனத் தமிழக அரசு கடந்த மாதம் உத்தரவிட்டது. இந்த அங்கீகாரம் வருடா வருடம் பெற வேண்டும் என்பது அரசின் உத்தரவு. ஆனால், வேலூர் மாவட்டத்தில் உள்ள 18 முக்கிய சி.பி.எஸ்.இ பள்ளிகள் அங்கீகாரத்தை வாங்காமல் உள்ளது. இந்தப் பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (CEO) மார்ஸ் கூறுகையில், ``வேலூர் மாவட்டத்தில், மொத்தம், 42 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உள்ளன. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திடமிருந்து அனுமதி பெற்றுள்ளன. ஆனால், இவற்றில், 18 பள்ளிகள், மாநில அரசின் அங்கீகாரம் பெறாமல் பள்ளியை நடத்தி வருகிறது. தமிழக அரசின் அங்கீகாரம் சி.பி.எஸ்.இ பள்ளிகள் கட்டாயம் வாங்க வேண்டும். இந்த 18 பள்ளிகள் அங்கீகாரம் வாங்காமல் இருப்பதால் அந்தப் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசின் அங்கீகாரம் பெற அந்தப் பள்ளிகளுக்கு 3 மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குள் அங்கீகாரத்தை வாங்க வேண்டும் அப்படி வாங்காவிட்டால் அந்தப் பள்ளிகள் மூடப்படும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!