'இன்னும் இரண்டு நாள்களில் சுமுகத் தீர்வு கிடைக்கும்' - விஷால்

கடந்த இரண்டு வாரமாக, தமிழ் சினிமாத்துறை மேற்கொண்டுவரும் வேலைநிறுத்தம் தொடர்பாக, தயாரிப்பாளர்கள் சங்கத்தினர்  தினமும் ஒரு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். புதுப்படங்கள் வெளியிட்டும் ஒரு மாதம் ஆன நிலையில், இந்த கியூப், யூ.எஃப்.ஓ கட்டண விவகாரம், திரையரங்கு கணினிமயமாக்கல், திரையரங்கிற்கு வரும் ஆர்வத்தை மக்களிடம் அதிகரிக்க ஃப்ளக்ஸிபிள் டிக்கெட் ரேட்டிங் உள்ளிட்ட பல விஷயங்களைத்  திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோரிடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நேற்று மாலை சென்னையில் நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில், எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், இன்றும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஷால்

பத்திரிகையாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால், 'ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த பேச்சுவார்த்தை, ஒரு சுமுகமான தீர்வை நோக்கி நகரப்போகிறது என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. இன்னும் இரண்டு மூன்று நாள்களில் இதற்கான தீர்வு எட்டப்படும்'' என நம்பிக்கை தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!