சாதி, மதத்தைப் புறக்கணித்த 1,24,000 பேர்! கேரளாவில் திடீர் புரட்சி ஏற்படுத்திய மாணவர்கள்

கேரளாவில் சத்தமில்லாமல் புதிய ட்ரெண்ட் ஒன்று உருவாகியுள்ளது. அதாவது, பள்ளி ஆவணங்களில் சாதி, மதம் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல் விட்டு விடும் போக்கு அதிகரித்துள்ளது. தற்போது கேரளாவில் சாதி, மதத்தைக் குறிப்பிடாமல் விடுவதை பெருமையாகக் கருத தொடங்கியுள்ளனர். அந்தவகையில் இந்த ஆண்டு மட்டும் 1,24,000 மாணவர்கள் சாதி, மத அடையாளம் இல்லாமல் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். . 

கேரள பள்ளி மாணவர்கள்

கேரள கல்வி அமைச்சர் சி.ரவீந்தரநாத் சட்டமன்றத்தில் நேற்று கூறுகையில், ``மக்களிடையே அனைத்து மதத்தினரும் சாதியினரும் சமமானவர்கள் என்பதை உணரும் போக்கு அதிகரித்து வருகிறது. வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று நம்புகிறேன் '' என்று தெரிவித்தார். 

கேரளாவில் உள்ள 9,000 பள்ளிகளில் சேர்ந்த 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஒன்று முதல் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் குறித்த பதிவேடுகளிலிருந்து இந்த முடிவு கிடைத்துள்ளது. கேரள அரசியல் தலைவர்களும், விளையாட்டுப் பிரபலங்களும் சமத்துவத்தை  உருவாக்க சில முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி விண்ணப்பங்களில் மகனையோ அல்லது மகளையோ சேர்க்கும்போது சாதி, மதம் பற்றி குறிப்பிடாமல் விட்டு விடுகின்றனர். பின்னர், விண்ணப்பத்தை புகைப்படமாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிடுகின்றனர். இந்தியக் கால்பந்து வீரர் சி.கே.வினீத் தன் மகனின் பிறப்புச் சான்றிதழை மதம் பற்றி குறிப்பிடாமல் பெற்றார். அந்தச் சான்றிதழை இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டார். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!