என்.டி.ஆர் படத்துக்கு க்ளாப் அடித்த எம்.ஜி.ஆர்! - நினைவூட்டும் பாலகிருஷ்ணா

மறைந்த ஆந்திர முதல்வரும் தெலுங்கு நடிகருமான என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு படமாக்க இருக்கிறது. அதில், என்.டி.ஆர் கதாபாத்திரத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். அந்தப் படத்துக்கான பூஜை, இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.

என்டிஆர் படத்தில் எம்ஜிஆர்

1976ல், 'தான வீர சூர கர்ணா' படத்தில் துரியோதனன், கிருஷ்ணன், கர்ணன் என மூன்று கேரக்டர்களில் என்.டி.ஆர் நடித்திருந்தார். அந்தப் படத்தின் முதல் ஷாட்டை எம்.ஜி.ஆர் க்ளாப் அடித்துத் தொடங்கிவைத்தார். அதை நினைவூட்டும் விதமாக, துரியோதனன் வேடமிட்ட என்.டி.ஆராக பாலகிருஷ்ணா நடிக்க, எம்.ஜி.ஆர் வேடமிட்ட ஒருவர் க்ளாப் அடித்த காட்சியை இந்தப் படத்தின் முதல் ஷாட்டாகப் படம்பிடித்தனர். அதை, துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு க்ளாப் அடித்து, இந்தப் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். படத்தை தேஜா இயக்குகிறார். குடியரசுத் தலைவருடன் பல அரசியல் பிரமுகர்களும் இந்தப் படத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டனர். என்.டி.ஆர் வாழ்க்கை வரலாற்றில் எவ்வளவோ விஷயங்கள் இருந்தும், எம்.ஜி.ஆர் க்ளாப் அடித்த காட்சியை முதல் ஷாட்டாகப் படம்பிடித்திருப்பது அவர்கள் இருவருக்குமான நட்பின் இலக்கணத்தை எடுத்துக்காட்டுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!