‘காவிரி விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படும்!’ - ரஜினி நம்பிக்கை #WeWantCMB

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதுதான் தீர்வு எனவும், இந்த விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படும் என நம்புகிறேன் என்று ரஜினி ட்வீட் செய்துள்ளார். 

ரஜினி

தமிழகம் மற்றும் கர்நாடகா இடையிலான காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கடந்த 16-ம் தேதி அன்று, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, 6 வாரக் காலங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டது. இதுதொடர்பாக மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனையடுத்து, காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச்செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில், காவிரி மேலாண்மை தொடர்பாக இதுநாள்வரை மௌனம் காத்து வந்த ரஜினி, தனது ட்விட்டர் பக்கத்தில் 'காவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வாக இருக்க முடியும். காவிரி விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படும் என நம்புகிறேன்' எனப் பதிவிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!