`கூட்டுறவுச் சங்கத் தேர்தல் முறைகேடுகளைக் கண்டித்துப் போராட்டம்!’- சிவகங்கையில் தினகரன் ஆதரவாளர்கள் கைதாகி விடுதலை

கூட்டுறவுச் சங்கத் தேர்தல் முறைகேடுகளை எதிர்த்துப் போராட்டம் நடத்திய தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ மாரியப்பன் கென்னடி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். 

mariappakennadi mla aresst

கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் ஆளும் கட்சியைத் தவிர மற்றவர்கள் யாரும் நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் மறவமங்கலம் கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என அ.ம.மு.கவினர் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம், மறவ மங்கலத்தில் டிடிவி தினகரன் அணியினருக்கு மறவமங்கலம் சாக்கூர் தொடக்க வேளான்மை கூட்டுறவு வங்கி வாக்காளர் பட்டியல் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது கூட்டுறவுச் சங்க அதிகாரிகள் மேலிடத்து உத்தரவு, அதனால் கொடுக்க முடியாது என்று பதில் கூறியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். மறவமங்கலம் வழியாகச் செல்லும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் சேர்க்கக் கோரியும், பாண்டியன் கிராம வங்கியில் பயிர்க்காப்பீட்டுத் தொகையைச் சரியாக வழங்கக் கோரியும், மறவமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அ.ம.மு.கவினர் கோஷங்களை எழுப்பினர். பல்வேறு இடங்களில் நடைபெறும் கூட்டுறவுச் சங்கத் தேர்தல் நடைமுறைகளைப் பார்வையிட்டு வந்த தகுதிநீக்கம் செய்யப்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ மாரியப்பன் கென்னடி, தன் ஆதரவாளர்கள் 80 பேரோடு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர்கள் மறவமங்கலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!