வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (30/03/2018)

கடைசி தொடர்பு:08:12 (30/03/2018)

இந்தியாவில் டயர் பதிக்கும் ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக்!

இந்தியாவில் டயர் பதிக்கும் ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக்!

சமீபத்தில், தன் டீலர்களுக்கு எனப் பிரத்யேகமாக நடைபெற்ற சந்திப்பில், புதிய காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவியைக் காண்பித்திருக்கிறது ஜீப் நிறுவனம். ரஞ்சன்கவுனில் அமைந்திருக்கும் தனது தொழிற்சாலையில், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற வலதுபக்க டிரைவிங் அமைப்பைக்கொண்டிருக்கும் உலக நாடுகளுக்கு, இதே எஸ்யூவியை இந்நிறுவனம் ஏற்கெனவே இங்கிருந்து ஏற்றுமதி செய்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

ஜீப் ட்ரெய்ல்ஹாக்


ஜூன், ஜூலை மாதத்தில் விற்பனைக்கு வரவிருக்கும் ட்ரெய்ல்ஹாக், காம்பஸின் புதிய டாப் வேரியன்ட்டாகப் பொசிஷன் செய்யப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கிறது. வழக்கமான மாடலில் இருக்கும் அதே 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின்தான் இங்கும் என்றாலும், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுக்குப் பதிலாக, 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

 

jeep trailhawk


Trail Rated ஆஃப் ரோடர் என்பதால், கூடவே ஜீப்பின் Active Drive Low-range 4WD தொழில்நுட்பம் உண்டு. ஏற்றுமதி மாடலில் இரு இன்ஜின் ஆப்ஷன்களும் இருந்தாலும், இந்திய மாடலில் டீசல் இன்ஜின் - புதிய 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் 'Rock mode' உடனான Selec-Terrain 4 வீல் டிரைவ் கூட்டணி மட்டும்தான் அறிமுகமாகும் எனத் தெரிகிறது. வழக்கமான மாடலைவிட, இது 20மி.மீ கூடுதல் கிரவுண்ட் கிளியரன்ஸைக் கொண்டிருக்கிறது.

 

compass 4WD


மேலும், ட்ரெய்ல்ஹாக்கின் முன்பக்க மற்றும் பின்பக்க பம்பர்கள், மேம்படுத்தப்பட்ட Approach (30 டிகிரி) மற்றும் Departure (33.6 டிகிரி) Angle-க்காக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. தவிர Hill Descent Control வசதியும் ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டிருக்கிறது. இதனுடன் 17 இன்ச் அலாய் வீல்கள், டூயல் டோன் கலர் ஆப்ஷன், சிவப்பு நிற ஹூக், பானெட்டில் கறுப்பு நிற வேலைப்பாடு, ஸ்கிட் பிளேட், அனைத்து வகை தட்பவெப்ப நிலைக்கும் ஏற்ற ஃப்ளோர் மேட் என வழக்கமான மாடலுடன் ஒப்பிடும்போது, ட்ரெய்ல்ஹாக்கில் கணிசமான மாற்றங்கள் இருக்கின்றன.

 

காம்பஸ் 4 வீல் டிரைவ்


இந்த ஆஃப்ரோடரின் புக்கிங், ஜீப் டீலர்களில் ஏற்கெனவே துவங்கிவிட்டது (அதற்கு, 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்). 18 லட்ச ரூபாய் முதல் 26 லட்ச ரூபாய்க்கு காம்பஸ் எஸ்யுவி விற்பனை செய்யப்படும் நிலையில், 24.4 டிகிரி Breakover Angle உடன் வெளிவரப்போகும் ட்ரெய்ல்ஹாக்கின் விலை, தோராயமாக 2-3 லட்ச ரூபாய் அதிகமாக இருக்கும் எனத் தகவல்கள் வந்துள்ளன. ஆக, பவர்ஃபுல்  டீசல் இன்ஜின்  - வசதியான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் - ஆஃப் ரோடிங் திறன் - பிரீமியம் கேபின் என அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது காம்பஸ்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க