வெளியிடப்பட்ட நேரம்: 14:29 (30/03/2018)

கடைசி தொடர்பு:14:29 (30/03/2018)

சிரஞ்சீவி நடிக்கும் 'சயீரா நரசிம்மரெட்டி' பட ஸ்டில்ஸை வெளியிட்ட அமிதாப் பச்சன்!

அதிக செலவில் பிரமாண்டமாய் தெலுங்கில் உருவாகும் திரைப்படம், 'சயீரா நரசிம்மரெட்டி'. சிரஞ்சீவி, நயன்தாரா லீட் ரோலில் நடிக்கும் இந்தப் படத்தில், விஜய் சேதுபதி மற்றும் அமிதாப் பச்சன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள்.

சயீரா நரசிம்மரெட்டி
 

இதுவரை தமிழில் நிறைய ஹிட் படங்கள் கொடுத்த விஜய் சேதுபதி, தெலுங்கில் அறிமுகமாகும் முதல் படம் இதுவாகும். அதனாலேயே இந்தப் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு, தமிழ் ரசிகர்களிடம் அதிகமாகியுள்ளது. மேலும், இந்த தெலுங்கு படத்தில் விஜய் சேதுபதி தமிழராகவே  நடிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை, சுரேந்தர் ரெட்டி இயக்க உள்ளார். இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர், சிரஞ்சீவியின் பிறந்தநாள் அன்று, கடந்த வருடம் வெளியானது. 

சயீரா நரசிம்மரெட்டி

இந்தப் படத்தில், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடிக்க இருந்த  'ஒப்பாயா' என்ற கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்கயிருப்பதாக தற்போது தகவல் கசிந்துள்ளது. மேலும், படம்குறித்த சில புகைப்படங்களை நடிகர் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க