`தமிழ் தெரிந்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை...!' - வருந்தும் ரஜினியின் `நடிப்பு' தோழி

ஜெயந்தி மற்றும் ஹேமா

மறைந்த கே.பாலசந்தர் இயக்கிய `இருகோடுகள்', `எதிர் நீச்சல்' 'வெள்ளிவிழா', `பாமா விஜயம்' படங்கள் எல்லாம் தமிழ்சினிமாவின் மாஸ்டர் பீஸ் திரைப்படங்கள்.

இந்தப் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகை ஜெயந்தி உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வருகிறார். கன்னட சினிமாவில் பிரபல நடிகையாக இருந்துவரும் ஹேமா செளத்ரிதான் தினசரி மருத்துவமனை சென்று ஜெயந்தியின் உடல்நிலையை விசாரித்து வருகிறார். கன்னடத்தில் ஹேமா செளத்ரி முக்கியமான நடிகையாக இருந்தாலும் உண்மையில் அவர் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே மெட்ராஸ்தான். 

ஜெயந்தி உடல்நலம் குறித்து விசாரிக்கவும், ஹேமா செளத்ரி தற்போது என்ன செய்கிறார் என்று கேட்கவும் ஹேமாவைத் தொடர்பு கொண்டு பேசினோம்.. 

`ஜெயந்தி உடல்நலம் தேறிவருகிறார். நான் தற்போது கன்னட சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறேன். சமீபத்தில் இயக்குநர்  மனோபாலா ஜெயந்தியின் உடல்நலம் குறித்து ஹேமாவிடம் போனில் பேசினார். அப்போது `ஏம்மா சென்னையில் பிறந்த நீங்க கன்னட சினிமாவுல மட்டும் நடிக்கிறீங்க, தமிழ்ப் படத்துலே ஏன் நடிக்காம இருக்குறீங்க...?  `என்று வருத்தப்பட்டார். `நான் தமிழ் மொழியை உச்சரிப்பு மாறாம சுத்தமா பேசுவேன் அதனால்தானோ என்னவோ தமிழ்ப் படத்துல நடிக்கிறதுக்கு யாருமே கூப்பிட மறுக்குறாங்க போலிருக்கு' என்றேன் அவரிடம். நான் படித்தது சென்னைக் கோபாலபுரத்தில் உள்ள கேர்ள்ஸ் ஹை ஸ்கூலில்தான். நான் படித்தபோது முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மூத்தமகள் செல்வி என் வகுப்புத் தோழி. மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் ரஜினி என் ஆக்டிங்கோர்ஸ் க்ளாஸ்மெட்.  சவுத் இண்டியன் ஃபிலிம் ஆர்டிஸ்ட் அசோஸியனில் ரஜினியும், நானும்  ஒன்றாகப் படித்தவர்கள். தமிழில் வெளிவந்த `அக்கரைப் பச்சை' படத்தை கன்னடத்தில் ரீ-மேக் செய்தனர். அதில் வாணிஶ்ரீ கேரக்டரில்தான் நான் முதன்முதலாக நடித்தேன். கர்நாடகாவில் அந்தப் படம் வெற்றி பெற்றதால் தொடர்ந்து கன்னட சினிமாவில் நடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், சென்னை நினைவுகளை ஒருபோதும் மறக்க மாட்டேன்’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!