சாலை விபத்தில் தந்தை, மகன் பலி - நெல்லையில் சோகம்! | father and son died at road accident in Tirunelveli

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (30/03/2018)

கடைசி தொடர்பு:20:40 (30/03/2018)

சாலை விபத்தில் தந்தை, மகன் பலி - நெல்லையில் சோகம்!

சாலை விபத்தில் தந்தை, மகன் பலி - நெல்லையில் சோகம்!

நெல்லை மாவட்டம் நவ்வலடி என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில், பைக்கில் சென்ற தந்தையும் மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சாஸ்தா கோயிலுக்குச் செல்லும் வழியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

விபத்தில் பலி

நெல்லை மாவட்டம் செட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. கூலித் தொழிலாளியான இவர், பங்குனி உத்திரத்தையொட்டி, தனது இரு மகன்கள் மற்றும் மகளுடன் பைக்கில் உவரி சாஸ்தா கோயிலுக்குச் சாமி கும்பிடுவதற்காகச் சென்றனர். பைக்கில் குடும்பத்துடன் 4 பேரும் கடற்கரைச் சாலை வழியாகச் சென்ற நிலையில், எதிரே வந்த லோடு ஆட்டோ மோதியது. மோதிய வேகத்தில் ஆட்டோ நிலைகுலைந்து சாலையோரத்தில் நின்ற மரத்தில் மோதியது.

இந்தச் சம்பவத்தில் பைக்கில் பயணம் செய்த முத்துப்பாண்டி, அவரது 6 வயது மகன் பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலியான முத்துப்பாண்டியின் மகள் பிருந்தா, மகன் பிரதிஷா ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். விபத்துக்குக் காரணமான லோடு ஆட்டோ டிரைவர் செல்வம் என்பவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோயிலுக்கு சாமி கும்பிடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.