வெளியிடப்பட்ட நேரம்: 18:08 (30/03/2018)

கடைசி தொடர்பு:18:08 (30/03/2018)

காவிரி விவகாரம்! - நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து கன்னியாகுமரி கடற்கரையில் போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 13பேர் கைது செய்யப்பட்டனர்.

காவிரி விவகாரம்! - நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் கைது

போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து கன்னியாகுமரி கடற்கரையில் போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 13பேர் கைது செய்யப்பட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து கன்னியாகுமரி கடற்கரையில் போராட்டம் நடத்த இருப்பதாக சமூக வலைதளங்களில் இன்று ஒரு பதிவு உலா வந்தது. அதில் இதோ ஒரு தளம், சாதி, மத அரசியல் சார்பின்றி சாதிக்கத்துடிக்கும் இளைஞர்களின் போராட்டக் களம். உரிமை காவிரிநீரைப் பெற கையாலாகாத மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து நம் உரிமையை நாம் நிலைநாட்டிட மாணவச் செல்வங்கள், மதிப்பு மிக்க இளைஞர் படையுடன் புனித வெள்ளியினை புரட்சி வெள்ளியாக மாற்றக் கூடுவோம் குமரியில். 30.03.2018 மதியம் 2 மணி, இடம் கடற்கரை சந்திப்பு எனப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 13 பேர் கைது

இதையடுத்து கன்னியாகுமரி கடற்கரை போலீஸார் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவந்தனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் கிள்ளியூர் தொகுதி இளைஞர்பாசறை செயலாளர் மெஜிஸ் உட்பட 13பேர் கன்னியாகுமரி கடற்கரைக்குப் போராட்டம் நடத்துவதற்காக வந்தனர். இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர். காவிரி மேலாண்மை வாரியத்துக்காக கன்னியாகுமரி கடற்கரையில் போராட்டம் நடத்த முயன்றவர்கள் கைது செய்யப்பட்டதால் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.