வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (30/03/2018)

கடைசி தொடர்பு:19:20 (30/03/2018)

``கோட்டையை நோக்கி பேரணி" - விஷால் அதிரடி..!

``கோட்டையை நோக்கி பேரணி

மார்ச் ஆரம்பம் முதலே தமிழ்த் திரையுலகில் பெரும் பிரச்னைகள் நிலவி வருகிறது. படப்பிடிப்பு நிறுத்தம், பெஃப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், திரையரங்குகள் மூடல், புது திரைப்படங்கள் வெளியீடு ரத்து என ஒட்டுமொத்த திரையுலகமே ஸ்தம்பித்து நிற்கிறது. தியேட்டர் உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு வைத்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக நம்பிக்கை அளித்ததைத் தொடர்ந்து வழக்கம்போல் திரையரங்குகள் ஓடும். ஆனால், புதுப் படங்கள் வெளியாகாது என்ற அறிவிப்பு வெளியானது. 

விஷால்

இந்நிலையில், இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விஷால், கார்த்தி, செல்வமணி, விக்ரமன், எஸ்.ஆர்.பிரபு, பி.சி.ஶ்ரீராம் என சினிமாத்துறை சங்கங்களின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் பலர் கலந்துகொண்டனர். இதில் பேசிய விஷால், ``மக்களிடம் டிக்கெட் கட்டணத்திற்கு மேல் அதிகமாக வாங்கும் ஆன்லைன் கட்டணத்தை குறைக்க வேண்டும். டிக்கெட் கட்டணத்தை முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு என முறைப்படுத்த வேண்டும். தயாரிப்பாளர்கள் முன்பு தியேட்டர்களுக்கு பிரின்ட் தந்தது போல் தற்போது படத்தை மாஸ்டரிங் செய்து தருகிறோம். புரெஜக்டர் வைத்து திரையிடுவது தியேட்டர் உரிமையாளர்களின் பொறுப்பாக இருக்க வேண்டும். அனைத்து தியேட்டர்களிலும் கம்ப்யூட்டர் பொருத்தப்பட்டு படத்தின் உண்மையான வசூலை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வைத்தார். அதுபோக, சினிமாத்துறையைக் காப்பாற்ற ஒரு வாரியம் அமைக்க வேண்டும். இது குறித்து முதல்வரையும், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவையும் சந்திக்க வரும் புதன்கிழமை பேரணியாகக் கோட்டையை நோக்கி செல்ல உள்ளோம். அரசாங்கம் தலையிட்டு சினிமாத்துறையை முறைப்படுத்த வேண்டும்" என்றார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க