`விஜயகாந்த் - 40' விழா- ரஜினி, கமல் ஆப்சென்ட்? | rajini, kamal absent in 'vijayakanth -40' function!

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (30/03/2018)

கடைசி தொடர்பு:22:00 (30/03/2018)

`விஜயகாந்த் - 40' விழா- ரஜினி, கமல் ஆப்சென்ட்?

`விஜயகாந்த் - 40' விழா- ரஜினி, கமல் ஆப்சென்ட்?

தமிழ் சினிமா துறைக்கு விஜயகாந்த் பிரவேசித்து நாற்பது ஆண்டுகள் ஆகின்றன. ஆரம்பத்தில் `தூரத்து இடிமுழக்கம்' படத்தில் அறிமுகமானவர் அடுத்து நடித்த `சட்டம் ஒரு இருட்டறை' படத்தின் வாயிலாக தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பரவலாகத் தெரிய ஆரம்பித்தார். முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் விஜயகாந்துக்கு போன்செய்து உடற்பயிற்சி செய்து உடலைப் பாதுகாப்பது குறித்து கிளாஸ் எடுத்தார். அப்போது கருணாநிதியின் கடும்விசுவாசியாக இருந்த எம்.ஜி.ஆரைச் சந்திப்பதை தவிர்த்தார். பெரிய அளவில் படிக்காத விஜயகாந்துக்கு நினைவாற்றல் அதிகம். 5 பக்க வசனத்தை டைரக்டர் கொடுத்தாலும் ஐந்தே நிமிடத்தில் மனப்பாடம் செய்து ஏற்ற, இறக்கத்தோடு கம்பீரமாகப் பேசுவது அவரின் ஸ்பெஷல். இப்போது அவரது மகன் சண்முகப்பாண்டியன் நடிக்க வந்துவிட்டார். 

விஜயகாந்த்

வருகிற ஏப்ரல் 15-ம் தேதி அன்று `விஜயகாந்த் - 40' விழா சென்னைக்கு அடுத்து தாம்பரத்திலிருந்து படப்பை போகும் வழியில் உள்ள கரிசங்கால் என்கிற ஊரில் பிரமாண்டமாக விழா நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது. அன்று காலை 11 மணிக்கு தே.மு.தி.க கட்சியின் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி ஆரம்பமாகிறது. முதலில் விஜயகாந்த் நடித்த படத்தில் இடம்பெற்ற பாடல்களின் கலைநிகழ்ச்சி நடக்கிறது. அடுத்தடுத்து விஜயகாந்த் குறித்த கருத்தரங்கம், பட்டிமன்ற நிகழ்ச்சி நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். ஏப்ரல் 15-ம் தேதி மாலை 6 மணிக்குத் தமிழ்த் திரைப்பட உலகத்தினர் பங்கேற்கும் பாராட்டு விழா நிகழ்ச்சி ஆரம்பமாகிறது. பெரும்பாலான சினிமா பிரபலங்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகின்றது. விஜயகாந்த் காலத்தில் நடித்து இப்போதும் நடித்துவரும் சத்யராஜ், பிரபு போன்ற நட்சத்திரங்கள் கலந்துகொள்கின்றனர். ரஜினியும், கமலும் அரசியல் களத்தில் இறங்கியிருக்கும் இந்தச் சூழ்நிலையில் விஜயகாந்த் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் அவரோடு கூட்டணி என்று ஆளாளுக்கு ஆரூடம் சொல்வார்கள் என்பதால் இருவரும் கலந்துகொள்ளாமல் தவிர்ப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க