வெகுவிமரிசையாக நடந்த பழநி பங்குனி உத்திரவிழா தேரோட்டம்...!

வெகுவிமரிசையாக நடந்த பழநி பங்குனி உத்திரவிழா தேரோட்டம்...!

பழநியில் பங்குனி உத்திரவிழா தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பழநி தேரோட்டம்

பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நாளான இன்று பழநியில் தேரோட்டம் நடைபெற்றது. இதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் பங்குனி உத்திரவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று இரவு வள்ளி, தெய்வானையுடன் முத்துகுமாரசுவாமிக்கு திருக்கல்யாணமும் தொடர்ந்து பதினாறு வகையான அபிஷேகமும் நடைபெற்றது. இதனால் நேற்றில் இருந்தே பழநி பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்க தொடங்கியது. 

பல்வேறு விதமான காவடிகளுடன் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஆடிப்பாடியபடி மலையேறினார்கள். இந்நிலையில், பழநி பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். பழநியின் நான்கு ரதவீதிகளிலும் பக்தர்களின் அரோகரா... கோஷத்துடன் தேரோட்டம் நடைபெற்றது. திருக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். வள்ளி, தெய்வானையுடன் முத்துகுமாரசுவாமி திருத்தேரில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சிக்கொடுத்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!