கிறிஸ்டோபர் நோலனிடம் மன்னிப்புக் கேட்ட கமல்ஹாசன்!

கிறிஸ்டோபர் நோலனிடம் மன்னிப்புக் கேட்ட கமல்ஹாசன்!

கிறிஸ்டோபர் நோலனிடம் மன்னிப்புக் கேட்ட கமல்ஹாசன்!

  நடிகர் கமல்ஹாசன், ட்விட்டரில் பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனை சந்தித்ததாகவும் அவரிடம் மன்னிப்புக் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன்

அரசியல் பணிகளுக்கு இடையே, `விஸ்வரூபம் 2' படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டிருந்த கமல், தற்போது திடீரென கிறிஸ்டோபர் நோலனை மும்பையில் சந்தித்திருக்கிறார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கமல் கூறியிருப்பதாவது, `கிறிஸ்டோபர் நோலனைச் சந்தித்தேன். அவரிடம் `டங்கிர்க்’ படத்தை,பாரம்பர்ய ஃபிலிம் ரீலில் பார்க்காமல் டிஜிட்டல் முறையில் பார்த்ததற்காக வருத்தம் தெரிவித்தேன். அந்தத் தவறுக்கான பிராயச்சித்தமாக, `ஹேராம்’ படத்தின் டிஜிட்டல் பிரதியை அவருக்கு வழங்கியிருக்கிறேன். அவர் நான் நடித்த பாபநாசம் படத்தைப் பார்த்ததில் மகிழ்ச்சி' எனப் பதிவிட்டிருக்கிறார்.


கமல் போலவே, கிறிஸ்டோபர் நோலனுக்கும் அறிமுகம் தேவையில்லை. ஹாலிவுட்டின் ஹிட் படங்களின் பட்டியலில்  ஃபாலோயிங், மெமன்ட்டோ, டார்க் நைட் ட்ரையாலஜி, இன்செப்ஷன், இன்டர்ஸ்டெல்லார், டங்கிரிக் என இவரது படைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. இவரின் இயக்கத்தில் கடந்தாண்டு வெளிவந்த டங்கிர்க், 3 ஆஸ்கர் விருதுகளைப் (சவுண்ட் மிக்ஸிங், சவுண்ட் எடிட்டிங், படத்தொகுப்பு) பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!