ஆளுநர் வருகைக்காக அவசர கதியில் போடப்படும் சாலை!

ஆளுநர் வருகைக்காக அவசர கதியில் போடப்படும் சாலை!

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்றதிலிருந்து தமிழகம் முழுவதும் மாவட்டவாரியாக தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் அவர் திருவள்ளுவர் மாவட்டத்துக்கு வருகிறார்.  

பன்வாரிலால் புரோகித்


திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தூய்மை இந்தியா தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்த விழா திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. 
விழா நடக்கும் அரங்கம் அமைந்துள்ள சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. ஒரு சில இடங்களில் செம்மண் சாலைகளாக உள்ளது. அதனால் கலெக்டர் சுந்தரவள்ளி இரவோடு இரவாகப் புதிய சாலைகளைப் போட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அவசர கதியில் போடப்படும் சாலை

அதைத்தொடர்ந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் தார்ச்சாலை அமைக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர். இன்று இரவு 9.30. மணிக்குத் தொடங்கிய இந்தப் பணி விடியற்காலை நான்கு மணிவரை தொடரும் எனத் தெரிகிறது. சாலை ஆமைக்கும் பணியில் பத்துக்கும் மேற்பட்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவசர கதியில் சாலைகள் போடப்படுவதால், தரமான சாலையாக இருக்குமா எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!