`மாபெரும் துரோகத்தை இழைத்திருக்கும் மத்திய அரசு!' - போராட்டம் குறித்து பன்னீர்செல்வம் ட்வீட் #WeWantCMB | Panneerselvam slams central government in Cauvery issue

வெளியிடப்பட்ட நேரம்: 11:28 (31/03/2018)

கடைசி தொடர்பு:11:42 (31/03/2018)

`மாபெரும் துரோகத்தை இழைத்திருக்கும் மத்திய அரசு!' - போராட்டம் குறித்து பன்னீர்செல்வம் ட்வீட் #WeWantCMB

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அதைச் செயல்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்து, அ.தி.மு.க சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம்
 

இதற்கான அறிவிப்பை அ.தி.மு.க-வின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது. அதில் வரும் 3-ம் தேதி (3.4.2018) அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அ.தி.மு.க சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

பன்னீர்செல்வம்
 

இதுகுறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டம் பற்றிய அறிவிப்பு பகிரப்பட்டுள்ளது. அதில் ‘தமிழக மக்களுக்கும் இந்திய நீதித்துறைக்கும் மாபெரும் துரோகத்தை இழைத்திருக்கும் மத்திய அரசின் வேதனையளிக்கும் நடவடிக்கையைக் கண்டித்து தமிழகத்தில் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும், 3.4.2018 - செவ்வாய்க் கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க