காவிரி விவகாரம்! மத்திய அரசுமீது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்!

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுமீது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழகம் மற்றும் கர்நாடகா இடையிலான காவிரி நீர் பங்கீடு தொடர்பான நடுவர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பிப்ரவரி 16-ம் தேதி அன்று, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, 6 வாரக் காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டது. இதுதொடர்பாக மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் போராட்டம் நடந்து வருகிறது.

இதனிடையே, காவிரி விவகாரம் குறித்து ஆலோசிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை தி.மு.க நாளை கூட்டியுள்ளது. மேலும், அ.தி.மு.க-வும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது. 

இந்நிலையில், நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுமீது, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. முன்னதாக, ஸ்கீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கோரியும் தீர்ப்பு வெளியான 16.2.2018-லிருந்து 3 மாதம் அவகாசம் கோரியும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!