வெளியிடப்பட்ட நேரம்: 11:49 (31/03/2018)

கடைசி தொடர்பு:13:48 (31/03/2018)

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு! வைகோ நடைப்பயணத்தைத் தொடங்கி வைத்த தலைவர்கள்

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து அதன் ஆபத்துகளைப் பற்றி மக்களிடம் விழிப்பு உணர்வு பிரசாரம் செய்யும் வகையில், தேனி மாவட்டம் கம்பம் வரை செல்லும் நடைப்பயணத்தை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இன்று மதுரை பழங்காநத்தத்தில் தொடங்கினார்.

நியூட்ரினோ எரிர்ப்பு நடை பயணம்

காலை 9 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடைப்பயணத்தைத் தொடங்கி வைக்க தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வருகை தந்திருந்தார். திருநாவுக்கரசர், தொல்.திருமாவளவன், முத்தரசன், கொளத்தூர் மணி, ஜவாஹிருல்லா, தெகலான் பாகவி, கௌதமன் உட்பட பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.

ஸ்டாலின் பேசும்போது, "கற்புக்கரசி கண்ணகி நீதிகேட்டு கிளம்பியதுபோல், நியூட்ரினோவை எதிர்த்து வைகோ பயணம் தொடங்கியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவு போட்டு ஆறு வாரக் காலம் முடியும் நேரத்தில் எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை. மத்திய அரசே, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கவில்லை. தமிழகத்தை மண்டலம் மண்டலமாகப் பிரித்து மோசமான திட்டங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது. சேது சமுத்திர திட்டத்தை ராமர் பாலம் என்று சொல்லி சதித் திட்டத்துடன் அந்த நல்ல திட்டத்தை நிறுத்தினார்கள். இப்போது ஆபத்தான திட்டங்களை நாங்கள் எதிர்க்கும்போது மட்டும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்" என்றார்.

இந்த நடைப் பயணத்துக்கான அடையாளத்தைக் குறிப்பிடும் வகையில் மூவேந்தர்களின் சின்னங்கள் இடம்பெற்ற கொடியை ஸ்டாலின் வெளியிட்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க