வெளியிடப்பட்ட நேரம்: 14:26 (31/03/2018)

கடைசி தொடர்பு:14:36 (31/03/2018)

அ.தி.மு.க உண்ணாவிரதப் பட்டியலில் பழனிசாமி, பன்னீர்செல்வம் பெயர் மிஸ்ஸிங்!

பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, அ.தி.மு.க சார்பில் ஏப்ரல் 3-ம் தேதி, தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. 

6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. கடந்த வியாழக்கிழமை கெடு முடிந்த நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனிடையே, மத்திய அரசுமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழக அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

இந்த நிலையில், "தமிழக மக்களுக்கும், இந்திய நீதித் துறைக்கும் மாபெரும் துரோகத்தை இழைத்திருக்கும் மத்திய அரசின் வேதனையளிக்கும் நடவடிக்கையைக் கண்டித்து, தமிழகத்தில் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும் ஏப்ரல் 3-ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்" என்று அ.தி.மு.க தலைமைக் கழகம் அறிவித்திருந்தது. இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அதைச் செயல்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்து, அ.தி.மு.க சார்பில் வருவாய் மாவட்டம் வாரியாக நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்துக்குத் தலைமையேற்போர் பட்டியலை அக்கட்சி இன்று வெளியிட்டுள்ளது. அதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெயர்கள் இடம்பெறவில்லை.

மாவட்டம் வாரியாக நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்துக்குத் தலைமையேற்போர் பட்டியல் விவரம்:

அதிமுக உண்ணாவிரதப் பட்டியல்

அதிமுக உண்ணாவிரதப் பட்டியல்
அதிமுக உண்ணாவிரதப் பட்டியல்

அதிமுக உண்ணாவிரதப் பட்டியல்