வெளியிடப்பட்ட நேரம்: 15:43 (31/03/2018)

கடைசி தொடர்பு:15:43 (31/03/2018)

`முதல்வர் நாராயணசாமியின் தகுதியற்ற செயல்’ - காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் சீறும் அ.தி.மு.க

”காவிரி மேலாண்மை தொடர்பாக நடைபெற்றக் கூட்டத்தில் மற்ற கட்சிகளைப் புறக்கணித்தது முதல்வர் நாராயணசாமியின் தகுதியற்ற செயல்” என புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் தெரிவித்துள்ளார்.

”காவிரி மேலாண்மை தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில், மற்ற கட்சிகளைப் புறக்கணித்தது முதல்வர் நாராயணசாமியின் தகுதியற்ற செயல்” என புதுச்சேரி அ.தி.மு.க எம்.எல்.ஏ., அன்பழகன் தெரிவித்துள்ளார்.

அதிமுக

முழு அதிகாரத்துடன்கூடிய காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று ஆணையம் ஆகியவற்றை 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்தக்  கெடு கடந்த 29-ம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. மத்திய அரசின் இந்தப் போக்குக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், புதுச்சேரி சட்டமன்றத்தில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க சட்டமன்றக் கட்சித் தலைவர் அன்பழகன், “உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், அதை அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத புதுச்சேரி அரசைக் கண்டித்தும், வரும் 3-ம் தேதி உண்ணாவிரதம் நடைபெறும். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், அனைத்துக் கட்சிகளையும் கூட்டாமல், காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை மட்டும் வைத்து கூட்டம் நடத்தியுள்ளது, முதல்வர் நாராயணசாமியின் தகுதியற்ற செயலைக் காண்பித்துள்ளது” என்று குற்றம் சாட்டினார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க