வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (31/03/2018)

கடைசி தொடர்பு:16:15 (31/03/2018)

டெலி மெடிசின் வசதிபெற்ற தமிழகத்தின் முதல் அரசு மருத்துவக் கல்லூரி!

தமிழகத்தில் அரசு மருத்து கல்லுரியில் முதல் முறையாக கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மெடிக்கல் காலேஜில் டெலி மெடிசின் வசதி இன்று துவங்கப்பட்டது. தமிழகத்தில் அரசு மருத்து கல்லுரியில் முதல் முறையாக கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மெடிக்கல் காலேஜில் டெலி மெடிசின் வசதி இன்று துவங்கப்பட்டது. தமிழகத்தில் அரசு மருத்து கல்லுரியில் முதல் முறையாக கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மெடிக்கல் காலேஜில் டெலி மெடிசின் வசதி இன்று துவங்கப்பட்டது.

மிழகத்தில், அரசு மருத்துவக் கல்லூரியில் முதல் முறையாக கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மெடிக்கல் காலேஜில், டெலி மெடிசின் வசதி இன்று தொடங்கப்பட்டது.

டெலி மெடிசின் வசதி

ஆசாரிப்பள்ளத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில், 20 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட டெலி மெடிசின் வசதி, 35 லட்ச ரூபாய் செலவில் டயாலிசிஸ் மிஷின், 5 லட்சம் ரூபாய் செலவில் புதிய ஆபரேஷன் தியேட்டர் என 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அ.தி.மு.க எம்.பி., விஜயகுமார் தொடங்கிவைத்தார்.

இதுகுறித்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், "தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லூரியில் முதல் முறையாக ஆசாரிப்பள்ளம் மெடிக்கல் காலேஜில் டெலி மெடிசின் வசதிசெய்யப்பட்டுள்ளது. இஸ்ரோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உலகின் எந்தப் பகுதியில் உள்ள மருத்துவர்களுடனும் கலந்துரையாடி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். மேலும், மருத்துவக் கல்லூரி மாணவர்களும், உலகின் எந்தப் பகுதியில் உள்ள மருத்துவ நிபுணர்களின் வகுப்புகளையும் லைவ்வாகப் பார்த்து, அறிந்துகொள்ள முடியும்" என்றார்.