புகையிலையை ஒழித்தாலே 40 சதவிகித புற்றுநோயைத் தடுக்க முடியும் - டாக்டர் சாந்தா பேட்டி | By banning tobacco, we can prevent forty percent of cancer cases, says Doctor Santha

வெளியிடப்பட்ட நேரம்: 18:06 (31/03/2018)

கடைசி தொடர்பு:18:06 (31/03/2018)

புகையிலையை ஒழித்தாலே 40 சதவிகித புற்றுநோயைத் தடுக்க முடியும் - டாக்டர் சாந்தா பேட்டி

ஸ்டெர்லைட்

“புகையிலையை ஒழித்தாலே 40 சதவிகித புற்றுநோயைத் தடுக்க முடியும். ஆனால், இங்கே பவர்ஃபுல்லான பெரிய டபாக்கோ லாபி இருக்கிறது. அதைத் தடுக்க அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை" என ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அடையார் கேன்சர் இன்ஸ்டிட்யூட்டின் சேர்மன் டாக்டர்.வி.சாந்தா கூறியிருக்கிறார்.

ஈரோடு-பெருந்துறை ரோடு, திண்டல் பகுதியில் உள்ள ஈரோடு கேன்சர் சென்டரின் புதிய கட்டடத் திறப்பு விழா மற்றும் அதிநவீன கதிர்வீச்சு மையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, அடையார் கேன்சர் இன்ஸ்டிட்யூட்டின் சேர்மன் டாக்டர்.வி.சாந்தா கலந்துகொண்டார்.

ஸ்டெர்லைட்

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "1952-ல் கேன்சர் பற்றி மக்களுக்கு எந்த விழிப்புஉணர்வும் இல்லை. கேன்சர் வந்தால் இறந்துவிடுவோம் என்ற அறியாமையில் இருந்தனர். ஆனால், டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி தான் கேன்சருக்கான மருத்துவமனையை உருவாக்க வேண்டுமென கடுமையாக முயற்சித்தார். 12 படுக்கை வசதி மற்றும் 2 மருத்துவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட அடையார் கேன்சர் இன்ஸ்டிட்யூட், இன்றைக்கு 600 படுக்கை வசதிகளுடன் சிறப்பாக மக்களுக்கு சேவையளித்துவருகிறது. கேன்சர் சிகிச்சையில், இன்றைக்குப் பல புதிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. புகையிலையை ஒழித்தாலே, 40 சதவிகித புற்றுநோயைத் தடுக்க முடியும். ஆனால், இங்கே பவர்ஃபுல்லான பெரிய டபாக்கோ லாபி இருக்கிறது. அதைத் தடுக்க அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை" என்றார்.

ஸ்டெர்லைட்

நிகழ்ச்சி முடிந்ததும் பத்திரிகையாளர்களைச் சந்தித்த டாக்டர்.வி.சாந்தா, "மக்களுக்கு புற்றுநோய் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும். புற்றுநோய் வந்தால் அதைத் தடுக்க, கட்டுப்படுத்த, சரிசெய்ய பல சிகிச்சை முறைகள் இருக்கின்றன. புகையிலையை அறவே ஒழித்தால், புற்றுநோய் உருவாவதை வெகுவாகக் குறைக்க முடியும். பெண்களுக்கு கர்ப்பப்பை மற்றும் மார்பகப் புற்றுநோய் தாக்கம் அதிகரித்துவருகிறது. வருடத்துக்கு ஒரு தடவை மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், முழுமையாக புற்றுநோயை சரிசெய்ய முடியும்" என்றார்.

ஸ்டெர்லைட் மற்றும் சாயக்கழிவுகளால் புற்றுநோய் ஏற்படுவதாக மக்கள் அச்சப்படுகிறார்களே... என பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தப் டாக்டர் சாந்தா, “புகையிலை போன்றவற்றால்தான் புற்றுநோய் ஏற்படுகிறது என ஆய்வுகள் சொல்கின்றன. மற்றபடி இன்னும் நிறைய ஆராய்ச்சிகளைச் செய்யவேண்டும்" என்று கூறினார்.