`விபத்தில் கால்களை இழந்த காதலனை மருத்துவமனையில் கரம்பிடித்த காதலி!’ - வாணியம்பாடியில் நெகிழ்ச்சி

`விபத்தில் கால்களை இழந்த காதலனை மருத்துவமனையில் கரம்பிடித்த காதலி!’ - வாணியம்பாடியில் நெகிழ்ச்சி

கால்களை இழந்து சிகிச்சை பெற்றுவரும் காதலனை மருத்துவமனையிலேயே சென்று பெண் ஒருவர் திருமணம் முடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மருத்துவமனையில் திருமணம்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த விஜய் மற்றும் ஷில்பா ஆகியோர், கல்லூரியில் படிக்கும்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னாளில் அது காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் விஜய் தனது வேலை தொடர்பாகப் பெங்களூருவுக்கு ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக, ரயிலிலிருந்து கீழே விழுந்ததில் விஜய் கால்களை இழந்துள்ளார். மேலும், அவருக்கு காயங்கள் ஏற்படவே, வாணியம்பாடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே, தன் காதலன் விஜய்யை திருமணம் செய்ய முடிவு எடுத்து பெற்றோர்களிடம் அனுமதி கேட்டுள்ளார் ஷில்பா. 

விபத்தில் விஜய் கால்களை இழந்தது தெரியவரவே ஷில்பாவின் ஆசைக்குப் பெற்றோர்கள் முட்டுக்கட்டைப் போட்டுள்ளனர். ஆனால், பெற்றோர்களின் எதிர்ப்பைமீறி தன் காதலனைக் கரம்பிடித்துள்ளார் ஷில்பா. பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டைவிட்டு வெளியேறிய அவர், மருத்துவமனையில் உள்ள காதலனைச் சென்று பார்த்தார். அப்போது, மருத்துவமனையிலேயே இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. விபத்தில் கால்களை இழந்த காதலனைக் கரம்பிடித்துள்ள ஷில்பாவுக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!