விஷமும் தூக்குக்கயிறும் தயார்! - அ.தி.மு.க எம்.பி-க்களை அழைக்கும் புகழேந்தி

புகழேந்தி

 ‘'விஷமும் தூக்குக்கயிறும் நான் தருகிறேன்'’  என்று அ.தி.மு.க  எம்.பி., நவநீதகிருஷ்ணனைப்  பகடி செய்துள்ளார், தினகரன் ஆதரவாளர் புகழேந்தி.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, நாடாளுமன்றத்தில் 15 நாள்களுக்கும் மேலாக அ.தி.மு.க  எம்.பி-க்கள் போராட்டம் நடத்தினர். அவர்களது போராட்டத்தால், நாடாளுமன்றம் முடங்கியது. எனினும், இவர்களது போராட்டத்துக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இதையடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், அ.தி.மு.க எம்.பி-க்கள் தற்கொலை செய்துகொள்வோம் என நவநீதகிருஷ்ணன், மாநிலங்களவையில் பேசினார். நவநீதகிருஷ்ணனின் கருத்துகுறித்து  மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், 'நவநீதகிருஷ்ணன் உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு பேசிவிட்டார்’ என்றார்.
இதைத் தொடர்ந்து, `37 எம்.பி-க்களும் தற்கொலை செய்துகொண்டாவது மக்கள் பிரச்னையைத் தீர்க்கவும்’ என்று பொள்ளாச்சி எம்.பி மகேந்திரனுக்கு சமூக ஆர்வலர் பெரியார் மணி என்பவர் எலி மருந்தை கூரியரில் அனுப்பி, பரபரப்பை ஏற்படுத்தினார்.

புகழேந்தி
 

இந்நிலையில், இன்று சென்னையில் தூக்குக் கயிறு மற்றும் எலி மருந்துடன் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, ‘'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வதாக அ.தி.மு.க எம்.பி., நவநீதகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில் தெரித்தார். அவருக்கு எவ்வாறு தற்கொலை செய்துகொள்ளலாம் என்பதில் குழப்பம் இருக்கலாம். அவருக்கு விஷம் மற்றும் தூக்குக்கயிறு தயாராக உள்ளது’' என்று பேசினார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!