வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (31/03/2018)

கடைசி தொடர்பு:20:00 (31/03/2018)

`வனவிலங்குத் தூதுவர்களாகும் மாணவர்கள்!’ - வண்டலூர் உயிரியல் பூங்காவின் அசத்தல் முயற்சி

நான்கு நாள் முகாமில் கற்கும் மாணவர்கள், உயிரியல் பூங்காவின் தூதுவர்களாக நியமிக்கப்படுவதுடன், வருடத்திற்கு 10 முறை இலவச நுழைவு அனுமதியையும் பெறுகிறார்கள். நான்கு நாள் முகாமில் கற்கும் மாணவர்கள், உயிரியல் பூங்காவின் தூதுவர்களாக நியமிக்கப்படுவதுடன், வருடத்திற்கு 10 முறை இலவச நுழைவு அனுமதியையும் பெறுகிறார்கள். நான்கு நாள் முகாமில் கற்கும் மாணவர்கள், உயிரியல் பூங்காவின் தூதுவர்களாக நியமிக்கப்படுவதுடன், வருடத்திற்கு 10 முறை இலவச நுழைவு அனுமதியையும் பெறுகிறார்கள். நான்கு நாள் முகாமில் கற்கும் மாணவர்கள், உயிரியல் பூங்காவின் தூதுவர்களாக நியமிக்கப்படுவதுடன், வருடத்திற்கு 10 முறை இலவச நுழைவு அனுமதியையும் பெறுகிறார்கள்.

                                                                                                   வண்டலூர் பூங்கா

``மூணு வருஷத்துக்கு முன்னாடி, ஆதித்யா, கர்ணான்னு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டிய புலிக்குட்டிகள், பள்ளி மாணவர்கள் சிலர், தம் உண்டியல் சேமிப்பை வெச்சு தத்தெடுத்திருக்காங்க. அதுக்கப்புறமும்கூட பொதுமக்களில் சில பேர், தங்களாலான சிறு தொகையை பூங்கா விலங்குகளின் பராமரிப்புக்காகக் கொடுத்திருக்காங்க. மக்களோட பங்களிப்பையும் அக்கறையையும், மாணவர்கள் மூலமா அதிகப்படுத்துறதுதான் இந்த சம்மர் கேம்ப்போட நோக்கம். தமிழகம் மட்டுமில்லாம, வேற மாநிலங்களில் இருந்தும் கூட, இந்த முகாம்ல கலந்துக்கணும்னு குழந்தைங்க ஆர்வம் காட்டுறாங்க. தொடர்ச்சியா இதுபோன்ற முகாம்களை நடத்துறதுக்கு, இது எங்களுக்கு ஊக்கத்தைக் கொடுத்திருக்கு. வனவிலங்குகள் அழியாம பாதுகாக்கவேண்டிய கடமை, இயற்கையைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்புனு, விழிப்புஉணர்வு கொடுக்கிறதுக்காக மாணவர்களே சமூகத்துக்கு ஆசிரியர்களா மாறுவாங்க” - சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்காவில், ஏப்ரலில் நடக்கவிருக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கான சம்மர் கேம்ப் குறித்து கேட்டபோது, இப்படித் தெரிவித்தார் இணை இயக்குநர் சுதா ஐ.எஃப்.எஸ்.

இந்தக் கோடை விடுமுறையில், வண்டலூர் உயிரியல் பூங்காவின் மாணவத் தூதுவர்களை உருவாக்கவிருக்கிறது, உயிரியல் பூங்கா நிர்வாகம். ஊர்வன, பாலூட்டிகள், பறவைகள் என ஒவ்வொரு உயிரினங்களைப் பற்றியும், அதன் உயிரியல்பைப் பற்றியும் விளக்குவதற்காக, நிபுணத்துவம் பெற்ற பலரும் மாணவர்களுடன் உரையாடும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது, இந்தக் கோடைக்கால கல்வி. ஏப்ரல் 11 முதல் மே 12-ம் தேதி வரை நடக்கவிருக்கும் இந்த `Zoo Ambassador` முகாம், மாணவர்களை 5 குழுக்களாகப் பிரித்து நடத்தப்பட இருக்கிறது. 

300 ரூபாய் பதிவுக் கட்டணமாக விதிக்கப்பட்டு, நாளை முதல் தொடங்கவிருக்கும் இந்த ஆன்லைன் பதிவு முறை, ஒவ்வொரு குழுவுக்கும் 30 மாணவர்கள் வீதம், ஐந்து குழுவுக்கும் மாணவர்கள் பதிவு நிறைவடைந்ததும் நிறுத்தப்படவிருக்கிறது. கேம்ப்பில் பங்குபெறும் மாணவ மாணவியரின் தங்குமிடம், உணவு வசதியைப் பெற்றோர்களே கவனித்துக்கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. 4 நாள்கள் நடைபெறும் முகாமில் கற்கும் மாணவர்கள், உயிரியல் பூங்காவின் தூதுவர்களாக நியமிக்கப்படுவதுடன், வருடத்துக்கு 10 முறை இலவச நுழைவு அனுமதியையும் பெறுகிறார்கள்.


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க