`தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி துரோகம் இழைத்துவிட்டார்!’ - கொதிக்கும் திருநாவுக்கரசர் | TN congress Chief Tirunavukarasar slams PM Modi over Cauvery Issue

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (31/03/2018)

கடைசி தொடர்பு:21:00 (31/03/2018)

`தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி துரோகம் இழைத்துவிட்டார்!’ - கொதிக்கும் திருநாவுக்கரசர்

”உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தினை அமைக்கமால் அலட்சியமாக இருந்தது தமிழக மக்களுக்கு மோடி செய்த மிகப்பெரும் தூரோகம். ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடி வரும் மக்களை மத்திய,மாநில அரசுகள் புறக்கணிக்கமால், பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

”உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி 6 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் அலட்சியமாக இருந்தது தமிழக மக்களுக்கு மோடி செய்த மிகப்பெரும் துரோகம். ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடி வரும் மக்களை மத்திய, மாநில அரசுகள் புறக்கணிக்காமல், பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்குத் தீர்வு காண முயல வேண்டும்” எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

திருநாவுக்கரசர்

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி 6 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் இழுத்தடித்தது தமிழக மக்களுக்கு மோடி செய்த பெரிய துரோகம் ஆகும். 6 வாரகாலம் மாநில அரசு தூங்கிவிட்டு தற்போது போராட்டத்தை அறிவித்திருப்பது அரசின் கையாலாகாத தனத்தினையே காட்டுகிறது.

எப்படித் தமிழக எம்.பி-க்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்வோம் என்று ஒரு மோசடியான விளம்பரத்தைச் செய்தார்களோ அதைப்போல,  உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்திருப்பதும் மக்களை ஏமாற்றும் ஓர் அறிவிப்பு. இதனால் எந்த நன்மையும் நடக்காது. மோடி அரசு, தமிழக மக்கள் மற்றும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவையும் மதிக்கவில்லை. அரசியல் சட்டத்தைமீறி பிரதமர் செயல்படுவது துரதிர்ஷ்டவசமானது.

தமிழகத்தின் நலன் காவு கொடுக்கப்பட்டுள்ள, நியூட்ரினோ திட்டம் மக்கள் நலன் கருதி இத்திட்டத்தைக் கைவிட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையால் கடந்த 25 ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மக்களின் போராட்டங்களை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பது சரியல்ல” என்றார்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க