வெளியிடப்பட்ட நேரம்: 20:53 (31/03/2018)

கடைசி தொடர்பு:20:53 (31/03/2018)

ஹேர்டையை அருந்தி தற்கொலைக்கு முயன்ற காவலர்..!

தலைக்கு அடிக்கும் ஹேர்டையை குடித்து, காவலர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தற்கொலைக்கு முயன்ற காவலர்

மதுரை மாவட்டம் பேரையூரை அடுத்த எழுமலை காவல்நிலையத்தில் எழுத்தராகப் பணிபுரிபவர், சிவமுருகன். இவர், இன்று காலை வழக்கம்போல பணிக்குச் சென்றுள்ளார். அப்போது, அவர் உடல்நிலை சரியில்லாதது போல இருப்பதைக் கண்ட சக காவலர்கள், முதலுதவிக்காக அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில், தலைக்கு அடிக்கும் கறுப்பு ஹேர்டையை அருந்தித் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. அதிகாலையிலேயே ஹேர்டையைக் குடித்த சிவமுருகன், இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்காமல் இருந்துள்ளார். 

 அதன்பின், மேல்சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சக மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. மேலும், சில நாள்களுக்கு முன்னர், அவர் வேறு இடத்துக்கு இடமாறுதல் கோரியதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம்குறித்து வழக்குப்பதிவு செய்து, எழுமலை போலீஸார் விசாரித்துவருகின்றனர். காவலர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க