காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நள்ளிரவில் போராடியவர்கள் கைது!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசைக்  கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

பெசன்ட் நகர்

 நேற்று மாலை மெரினா கடற்கரையில் மத்திய அரசைக் கண்டித்து தடையை மீறி இளைஞர்கள்  கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அதன் பிறகு 15-க்கும் மேற்பட்டவர்கள்  கைது செய்யப்பட்டு பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து மெரினாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 

பெசன்ட் நகர்இந்நிலையில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இரவு பதினோரு மணியளவில் கூடிய பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு வந்த காவல்துறையினர்  அவர்களைக்  கைது செய்தனர். 
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ரகுநாத சோழன், ‘நேற்று மாலை 9 மணி அளவில் நண்பர்கள் முடிவு செய்து போராட்டத்தில் குதித்தோம். இரவு 11 மணியளவில் பெசன்ட் நகர் கடற்கரையில் போராட்டத்தை அமைதியான முறையில் தொடங்கினோம். அப்போது காவல்துறையினர் எங்களைக் கைது செய்தனர். காவிரி விவகாரத்தில் மக்களும் களமிறங்கி போராட வேண்டும் என்பது தான் எங்களின் விருப்பம்” என்றார். 

கைது செய்யப்பட்டவர்கள் 13 பேர்களுக்கு மேற்பட்டவர்கள் தற்போது  பெசன்ட் நகரில்  இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

மெரினாவில் காவல்துறை அலார்ட்:

நாளை விடுமுறை தினம் என்பதால் சாதாரண நாள்களை விட மக்கள் அதிக அளவில் கூடுவது வழக்கம். ஆனால் தற்போது மெரினாவில் போராட்டம் நடைபெறலாம் எனத் தகவல்கள் வெளியானதால் காவல்துறையினர் அலார்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். நள்ளிரவிலும் காந்தி  சிலை  அருகே குவிந்த காவல்துறையினர் தற்காலிக தடுப்புகளை அமைத்து வருகிறார்கள்.

மெரினா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!