”காவிரி விவகாரத்தில் தமிழகம் வலுவான வாதங்களை முன்வைக்க வேண்டும்'' - அன்புமணி ராமதாஸ் 

அன்புமணி ராமதாஸ்

”காவிரி விவகாரத்தில் தமிழகம் வலுவான வாதங்களை முன்வைக்க வேண்டும்'' என பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான தீர்ப்பில் விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. காவிரிப் பிரச்னை தொடர்பான விஷயத்தில் தமிழகத்துக்குக் கர்நாடகம் செய்ய நினைக்கும் துரோகத்தைவிட, பெரிய துரோகத்தைத் தமிழகத்துக்கு இழைக்க மத்திய அரசு துடிக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி. காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பைச் செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் நாட்டு மக்களிடையே சலசலப்பு ஏற்படும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியிருக்கிறது. இதுவரை கர்நாடக அரசு கூறிவந்த காரணத்தைக் கர்நாடகத்தின் குரலாக மாறி மத்திய அரசு ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இதிலிருந்தே மத்திய அரசு யாருக்காகச் செயல்படுகிறது என்பதை உணர்ந்துகொள்ளலாம். மத்திய அரசின் மனுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் வலுவான வாதங்களை முன்வைக்க வேண்டும்'' என்று அதில் தெரிவித்துள்ளார்.
 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!