ஆளுநரைச் சந்திக்கிறார் கிரிஜா வைத்தியநாதன்...!

ஆளுநரைச் சந்திக்கிறார் கிரிஜா வைத்தியநாதன்...!

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சந்தித்து பேசவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி உச்ச நீதிமன்றம் விதித்த கெடு முடிவடைந்துவிட்ட நிலையில், அதற்கான ஆரம்ப பணிகளை கூட மத்திய அரசு செய்யவில்லை. இதற்கிடையே மேலாண்வாரியம் அமைக்க மேலும் 3 மாத காலம் அவகாசம் வேண்டும் என மனுதாக்கல் செய்திருக்கிறது. கர்நாடக தேர்தலை மனதில் வைத்தே காவிரி விவகாரத்தில் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் வேளையில், காவிரி தொடர்பான போராட்டங்கள் தமிழகத்தில் வலுக்கத் தொடங்கியுள்ளன. 

இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழக தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சந்தித்து பேசவுள்ளார். ஆளுநர் விடுத்த அழைப்பின் பேரில் கிரிஜா அவரைச் சந்திக்கவுள்ளார். நண்பகல் 12.30 மணிக்கு நடைபெறும் இந்தச் சந்திப்பில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனும் கலந்துகொள்ளவுள்ளனர். காவிரி விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது. காவிரி விவகாரம், ஸ்டெர்லைட் போராட்டம் என பிரச்னைகளுக்கு பஞ்சமில்லால் தமிழகம் பரபரத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சமீபத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை ஆளுநர் புரோஹித் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!