வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (01/04/2018)

கடைசி தொடர்பு:15:00 (01/04/2018)

டி.ஜி.பி. ஆபீஸ் முன்பு தீக்குளிக்க முயன்ற இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட்...! எஸ்.பி. நவடிக்கை

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன், ரகு என்ற ஆயுதப்படை காவலர்கள் சென்னை டி.ஜி.பி அலுவலக வளாகத்தில் கடந்த 21-ம் தேதி தீக்குளிக்க முயற்சி செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட இரு காவலர்களையும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் சஸ்பெண்ட் செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ’’எந்தவித காரணமும் இல்லாமல் வெறும் சாதிய காரணத்தைக் கூறி மட்டுமே எங்களை மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் எங்களை வேறு ஊருக்கு பணி மாறுதல் செய்துவிட்டார். அவருக்கு பிடித்த அவரது சாதிக்காரர்களை மட்டுமே தனக்கு பக்கத்தில் வைத்துக்கொண்டு மாவட்ட காவல்துறையை கட்டுப்படுத்த நினைக்கிறார். இதனால் மாற்று சாதிக்காரர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதனை கண்டிக்கவே நாங்கள் தீக்குளிக்க இங்கே வந்தோம்’’ என்று இரு காவலர்களும் தெரிவித்தனர்.

எஸ்.பி பாஸ்கரன்

இதற்கு மறுப்பு தெரிவித்த மாவட்ட எஸ்.பி பாஸ்கரன், ‘’அவர்கள் பணி நேரத்தில் செய்த தவறுக்கும், ஒழுக்கமின்மைக்குமே பணி மாறுதல் பெற்றனர். இது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடக்கூடாது. அவர்கள் மேல் முறையான விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். அதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜாமினில் வெளியே வந்திருந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரையும் மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.